மூட நம்பிக்கையை தூக்கிலிடுங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மூட நம்பிக்கையை தூக்கிலிடுங்கள்..!!
கார்மேக கத்தரிப்புகளில்
வெட்டுண்டு கிழிந்துபோன வானத்தை
எந்த தையற்காரன் கொண்டு
யார் தைப்பது..??
கிழிந்துபோனதில்
அழுதுகொண்டிருக்கும் வானத்தின்
கண்ணீரை யார் நிறுத்துவது..??
அடிகளார் என்றும்
அம்மன் அவதாரம் என்றும்
பாத விந்தாரங்களை
பூசித்து அர்ச்சிக்கும் மூடர்களே
அழைத்து வாருங்களடா
அந்த அவதாரங்களை..
மக்களை அவலத்தில் தள்ளும்
மழையை நிறுத்திக் காட்டட்டும்...!!
வாயில் லிங்கம் வரவழைத்தும்
மூடிய கரங்களில் விபூதி வரவழைத்தும்
கடவுளுக்கு அடுத்ததாக நான்தான்
என்று அறைகூவல் விடும்
கண்கட்டி வித்தைக்காரர்களை அழையுங்களடா
வெள்ள நீரை வற்றி விடச் செய்யட்டும்..!!
சாமியாரின் ஆசியால்
குழந்தை கிடைத்தது
சாமியாரின் வாழ்த்தினால்
வணிகம் செழித்தது
சாமியாரின் கருணையால்
குடும்பமே செழித்தது...
இப்படியெல்லாம் கூறும்
குருட்டுப் பிசாசுகளே
கூப்பிடுங்களடா
அந்த கூறு கெட்ட சாமியார்களை
மழையின் அத்தனை சேதங்களையும்
பார்வையிலேயே சரிசெய்து காட்டட்டும்..!!
மூட நம்பிக்கைகள் இருக்கும்வரை
மூழ்கித்தான் போகுமடா
இந்த உலகமும்..!!