வலி தரும் வார்த்தைகள்
காற்று குமிழி காற்று
பட்டே உடைந்து போகும்
நானும் நானாலே உடைந்து போகிறேன்
நான் என்பது நானில்லை
என் உணர்வுகள்
உளி கொண்டு செதுக்க
பாறை கூட சிலையாகும்
உன் வார்த்தை உளி கொண்டு செதுக்க
நான் சிலையாகவில்லை
சிதைந்து போகிறேன்
சில்லு சில்லாய் உடைத்த மனதை
மீண்டும் ஒன்று சேர்க்கிறாய்
நான் களிமண்ணாய் இருப்பதினால்
கண்ணாடியாய் நொருங்கிவிட்டால்
கையில் அள்ள முடியாது
என்னை புரிந்துகொள்ளவில்லை - நான்
உன்னை புரிந்துகொள்ளவில்லை - நீ
நாமிருவர் நமை புரியாமல், புரிந்து கொள்ள
ஆசைப்பட்டு பிரிந்து நிற்கிறோம்
பிரிய மனமில்லாமல் !
வேண்டாமே இந்த இடி இறக்கும் வார்த்தைகள்
வார்த்தைக்கு இருக்கும் பலம் நாம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு இல்லையா !