வள்ளுவர்

வள்ளுவன்
மிக நல்லவன்
எவ்வளவு சொன்னாலும்
கேட்காத மக்களுக்கு
1330 பாக்கள் சொன்னவன்

அதி காரம் இல்லாத
இவன் அதிகாரப்படி
நடந்து அதிகாரம்
உள்ள பதவியில் ஏழைகள்

தாடையில் வைத்தான்
தாடியை
ஒன்னரை அடியில்
வைத்தான் தடியை

மயிலாப்பூரில்
பிறந்ததாலோ என்னவோ
இவன் வரிகள்
மயில்களாய்ப் பிறந்தன

இவன்
எழுத்தாணி கொண்டு
ஓலையில்
ஏற்றியதை நாம்
முளையில் ஏற்றாது
மூலையில் ஏற்றிவிட்டோம்

மனிதன் மரை கயிலாது
மனிதம் மறையாது
காத்தது பொதுமறை

அது பொது மறை அல்ல
2000 ஆண்டிற்கு முன் அருளிய
முது மறை புது மறை

அவன் எழுத்தாணி கொண்டு
தன் எழுத்தால் அடித்தான் ஆணி

இவன் பொருள்
வைத்தால் பாடுவோர்
மத்தியில்
இவன் பொருள் வைத்துப்
பாடியவன்

தமிழனுக்கு
ஊட்டச்சத்து எப்பால்
அது 2000 ஆண்டுக்கு அப்பால்
அறிவு மூப்பால்
இவன் இயற்றிய
முப்பால்

இவன் பாவலர்களின்
ஆதாம்
இவன் பா அனைத்தும்
பாதாம்

அடியாள் வைத்து அடித்த
அடியால் திருந்தாதவனும்
இவன் அடியால் வருந்துவான்

இவன் வரியால்
மக்களுக்கு வரி போதாது
வாழ வழி போட்டவன்

எழுதியவர் : குமார் (19-Jan-19, 9:29 pm)
Tanglish : valluvar
பார்வை : 99

மேலே