innila - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : innila |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 255 |
புள்ளி | : 56 |
கவிதை உலகில் சிறு குழந்தை...
உண்மையில் மூன்று குழந்தைகளுக்குத் தாய்.
சிவப்பு சூரியன் உதிச்சாச்சு...
சிவந்து... வானம் சிரிச்சாச்சு...
களைத்த நிலவு மறைந்தாச்சு...
காலைத் தென்றல் கலந்தாச்சு...
சேவல் சத்தம் கேட்டாச்சு...
சிட்டுகள் சிறகு விரிச்சாச்சு...
நேற்றய போர்க்களத்தை
நெஞ்சில் சுமந்த படி...
போர்வைக்குள் முகம புதைத்து
புலம்பித் தவிக்கும்... மனமே...
புறப்படு...
புதிய விடியலில்..
புத்தம் புது ஆயுதங்களை
புன்னகையோடு ஏந்திக் கொண்டு...
போராடத் தயாராகு...
பதுப் பாதை காத்திருக்கு..
நான்
தாயாகும் போது
உண்டான
பரவசத்தை விட
பன் மடங்கு....
மணம் பரப்பும் குண்டு மல்லி
கொத்துக் கொத்தாய்... என்
மனதுக்குள்ளே பூத்து...
தித்திக்கும் இன்பத்தை
உண்டாக்கி...
கொண்டாட்டத்தால் ...என்னை
திண்டாட வைக்குதடி....
சேயே....என்
செல்ல மகளே...நீ
தாயாகப் போகும்
செய்தி...
பௌர்ணமி நிலவை தற்செயலாய் பார்க்கையில் உன் சிரித்த முகம் தெரிந்தது...
தினமும் நிலவையும் நிலவில் உன்னையும் பார்ப்பதே அனுதின வழக்கமாகப் போனது...
மறையும் நிலவு நீ இருக்கும் தூரத்தை உணர்த்திற்று...
தேய்ந்த நிலவு உன் கோபத்தை நினைவூட்டியது...
முழுநிலவைக் காணும்போதெல்லாம் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைகிறேன்...
நிலவொளியில் உன் நினைவுகளோடு நான்...
திருநங்கை
அழகிய கூடலில்
விதி நகர்த்திய அணுக்கள்
திசைமாறி கூடியதால்
இறைவனின் படைப்பு மாலையில்
உதிர்ந்துபோன பூக்கள்
உதிர்ந்து போன பூக்களை
உலர வைக்கும் நம் சமூக கோட்பாடு
புதுமை பெண்ணுக்கு
பா இசைத்த பாரதிகூட
இவர்களை மறந்து போனது ஆச்சரியம்தான்
சிவப்பு சூரியன் உதிச்சாச்சு...
சிவந்து... வானம் சிரிச்சாச்சு...
களைத்த நிலவு மறைந்தாச்சு...
காலைத் தென்றல் கலந்தாச்சு...
சேவல் சத்தம் கேட்டாச்சு...
சிட்டுகள் சிறகு விரிச்சாச்சு...
நேற்றய போர்க்களத்தை
நெஞ்சில் சுமந்த படி...
போர்வைக்குள் முகம புதைத்து
புலம்பித் தவிக்கும்... மனமே...
புறப்படு...
புதிய விடியலில்..
புத்தம் புது ஆயுதங்களை
புன்னகையோடு ஏந்திக் கொண்டு...
போராடத் தயாராகு...
பதுப் பாதை காத்திருக்கு..
அவள் அங்கம் தவிர்த்து
அனைத்தும் அழகாய்
தெரிவது அப்பனுக்கு மட்டும்தான் ,
தாயிடமும் தாரத்திடமும்
முழுமையாய் உணராத
பெண்மையின் தன்மையை ,
மகளிடம் மட்டுமே
மண்டியிட்டு கற்கிறான் .
பிஞ்சு மகள் பாதங்களை
பின்தொடர செய்கிறது ,
அம்மாவின் மனைவியின்
அன்பினை அலட்சியம் செய்தது.
வக்கிர பார்வைகள் குருடாகிப்போனதும்
வாலிப வசைகள் ஊமைகளானதும்
கேலியும் கிண்டலும் கிருக்கெனப்பட்டு
சுருக்கென உரைத்ததும் ....
பிறந்தவள் பெண்ணென்பதாலே .
பெண்மையின் தன்மையை உணர
சில தலைமுறை தேவையாய் இருந்தது ,
அம்மா அக்கா தங்கை தாரம் ...
முடிவில் மகளாய் .
தாயொரு தெய்வம்
தாரமோ தேவதை
என்றவன் கண்டா
களைந்து அழித்துவிட
களையல்ல நான்...
வெட்ட வெட்டத் துளிர்த்திடும்
காட்டு மரம்...
வாளியால் அள்ளி
வீசி எறிந்திட
வேலியோர குட்டையல்ல...
அடங்காது ஆர்ப்பரிக்கும்
அலை கடல்...
துரத்தினால் ஓடி ஒளிய
துணிவில்லா பூனையல்ல...
பனிமலைகளில்
பகிரங்கமாய் திரிந்திடும்
பனிக் கரடி...
கூண்டில் அடைத்திட
கொஞ்சும் கிளியல்ல...
குன்றா முயற்சியுடன்
குன்று தாண்டிப் பறந்திடும்
பருந்து...
பாதையில் சுவர் எழுப்பி
பயமுறுத்தி முடக்கினாலும்...
வானம் முட்டும்
ஏணி இட்டு
ஏறித் தொட்டிடுவேன்
எரி நட்சத்திரம்.
🍁இன்னிலா🍁
வண்ணச் சோலையுள்ளே
வழக்கமான இடத்தினிலே
வாடிக்கையாகவும்
வாட்டத்தோடும்
வந்தமர்ந்து....
விளையாடும் பிள்ளைகளை
வேடிக்கைப் பார்க்கும்
வயதான பாட்டியின்
ஒடுங்கிய விழிகள் - அங்கே
ஓடிக் களிக்கும்
ஒவ்வொரு குழந்தையிடத்தும்....
உற்று நோக்கித்
தேடுகின்றன - தன்னை
ஒதுக்கி விட்ட பிள்ளையின்
பிள்ளையை...
மனத்தோடு மன னம் செய்த
கணக்கொன்னா காதல் வார்த்தைகள்
கண்ணாளனே.... உன்
காந்தக் கண்களைக் கண்டதும்
கெண்டை முள்ளாகி
தொண்டைக்குள்ளே சிக்கி
திண்டாட வைக்கிறதே...
உண்டான காதலை
உணர்த்துவது எவ்வாறு??
இன்னிலா...