அடங்காது ஆர்ப்பரிக்கும்....
களைந்து அழித்துவிட
களையல்ல நான்...
வெட்ட வெட்டத் துளிர்த்திடும்
காட்டு மரம்...
வாளியால் அள்ளி
வீசி எறிந்திட
வேலியோர குட்டையல்ல...
அடங்காது ஆர்ப்பரிக்கும்
அலை கடல்...
துரத்தினால் ஓடி ஒளிய
துணிவில்லா பூனையல்ல...
பனிமலைகளில்
பகிரங்கமாய் திரிந்திடும்
பனிக் கரடி...
கூண்டில் அடைத்திட
கொஞ்சும் கிளியல்ல...
குன்றா முயற்சியுடன்
குன்று தாண்டிப் பறந்திடும்
பருந்து...
பாதையில் சுவர் எழுப்பி
பயமுறுத்தி முடக்கினாலும்...
வானம் முட்டும்
ஏணி இட்டு
ஏறித் தொட்டிடுவேன்
எரி நட்சத்திரம்.
🍁இன்னிலா🍁