காற்றோடு வந்தது மெல்லியபாட்டு

மலையோரத்து தென்றல் காற்று
மாலைநேரத்து வானத்தின் நிலவு
காற்றோடு வந்தது மெல்லியபாட்டு
கண்களில் வழிந்தது கண்ணீர் சொட்டு !

மலைப்புறத்து மங்கையின் பாட்டு
மனதை நெகழ்த்தியது மெட்டு
காதல் பிரிவின் சோகமோ
கடந்தகால குடும்பப் பூசலோ !

என்ன நினைத்தவள் பாடுகிறாள்
என்ன மொழியோ புரியவில்லை
என்ன துயரமோ தெரியவில்லை
என்நெஞ்சை விட்டு அகலவில்லை !

காற்றோடு வந்த மெல்லியபாட்டில்
கண்களில் வழிந்தது கண்ணீர்சொட்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-18, 10:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே