வேளாவேளை வேலை

அது ஒரு அழகிய மாலைப்பொழுது..
என் தாய்க்கும், சுற்றி இருந்தோருக்கும்....
மட்டற்ற மகிழ்ச்சி.. வீட்டிலே பிரசவம்
பார்த்த மங்கையர் அனைவருக்கும்,
ஆம்.!நான் பிறந்துவிட்டேன்...!

அறை என்னவோ சிறிதாய் இருப்பினும்...
சொகுசான நீர்மெத்தை என்ன..?!
அழாமல் வந்திட்ட ஆகாரமென்ன..?!
இடைஞ்சலே இல்லாத தூக்கமென்ன..?!
இசைபோல் என்தாய் குரல் மட்டும்
கேட்கும் இன்பமென்ன..?!
பத்தாதே பத்துமாதம் என்னசெய்ய.?!

சோலை முடிந்து வேலை தொடக்கம்..
அமுதுக்கு அழவேண்டியுள்ளது..!
விசிறியின் வேகத்துக்கும் அழும்வேலை..!
அவ்வப்போது வந்துசெல்லும்
சொந்தக்கார முகம் பார்த்து..
அரண்டு அரண்டு அழும்வேலை.!
உறங்கவிடாது உரக்கப்பேசும்
உருப்படாத உத்தமர்கள்..
வாய்மூடி மௌனமாகிட
வாய்பிளந்து அழும்வேலை.!

ஒன்றாம் வகுப்பில் நுழைவதற்குள்
ஒன்றா...? இரண்டா..?
ஓயாத பலவேலை..!

------------ தொடரும்-------------

எழுதியவர் : உமர்ஷெரிப் (12-Jul-18, 6:40 pm)
சேர்த்தது : ஷெரிப்
பார்வை : 67
மேலே