போராடத் தயாராகு

சிவப்பு சூரியன் உதிச்சாச்சு...
சிவந்து... வானம் சிரிச்சாச்சு...

களைத்த நிலவு மறைந்தாச்சு...
காலைத் தென்றல் கலந்தாச்சு...

சேவல் சத்தம் கேட்டாச்சு...
சிட்டுகள் சிறகு விரிச்சாச்சு...

நேற்றய போர்க்களத்தை
நெஞ்சில் சுமந்த படி...

போர்வைக்குள் முகம புதைத்து
புலம்பித் தவிக்கும்... மனமே...

புறப்படு...

புதிய விடியலில்..
புத்தம் புது ஆயுதங்களை
புன்னகையோடு ஏந்திக் கொண்டு...

போராடத் தயாராகு...
பதுப் பாதை காத்திருக்கு..

எழுதியவர் : இன்னிலா (4-Nov-18, 10:42 pm)
பார்வை : 101

மேலே