கருகும் மொட்டுகள்

எவ்வித சலனமும் மனதில் இல்லாத
பள்ளி குழந்தைகளின் தங்க மனங்களும்
பார்வை சிரிப்பாலே அள்ளி பருகவைக்கும்
காதல் தேனீக்கள் உறையும் பூக்களும்
கனவுகளை சுமந்து வாழ்ந்து வர

சிறுகுழந்தை புன்னகையை பறித்திட்ட காமுகனை
சீறி பழிவாங்கிடவே இவ்வுலகத்தே யாருமேஇல்லையோ
குருடாகவே போகும் உலகில் பற்றும்
குறுகி கல்லாக மாறி போனதோ
கற்றவரும் கல்லாதவரும் உண்மையை உரைக்காது
மௌனமாய் அடங்கி இருக்க பழக
நீதிக்கு உண்மையை உரைக்க யாருமின்றி
நீதிக்கு துணை வருகிறதே பணமும்
இதனால் மனமும் உடைந்து போகும்
மலர்களை தாங்கிய தாய் காம்புகள்
தன்னையே தன்னை அழித்து கொள்ள

எழுதியவர் : அகிலன் ராஜா (5-Nov-18, 5:57 am)
Tanglish : karugum mottugal
பார்வை : 142

மேலே