வெற்றி படி
பயணம் கடினம் தான்
இலக்கு இமயம்
என்றால்...
சிகரம்
சரியாது
உனக்கு துணிவிருந்தால்
உச்சியில்
ஒளிர்கிறது
புகழ் எனும் ஒளி தீபம்
அடைய எண்ணம் இருந்தால்
எதுவுமே தடையில்லை
முதல் அடி வைத்தவுடன்
உன் காலடியில் தேடாதே
முன்னேற்றம் காண இங்கே
பல அடியை கடக்க வேண்டும்
நம்பிக்கை மட்டுமே
நம்மை ஜெயிக்க வைக்கும்
முயற்சி தொடரட்டும்
முள் பாதையில் பூ மலரும்...
மழை துளி
ஓடை நதி என வளரும்
உன் உழைப்பின் வலி
சிகரத்தை நோக்கி
பயணம் கடினம் தான்...