ஶ்ரீ கிருஷ்ணா
~~~~~ஶ்ரீ *கிருஷ்ணா*~~~~
🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
தீபாவளி என்ற அரக்கனிடம்
திரும்ப என்னைக் காப்பாற்ற திரானியற்ற ஶ்ரீகிருஷ்ணா
திறமை உனக்கு புஷ்வானம்..
நரகாசுரனை நீ கொண்றாயா ?
நம்ப மாட்டேன் ஒருநாளும்
சத்தியபாமா சாதித்தால்
சத்தியமாக நீ அல்ல..
உனக்கந்த சக்தி உண்டென்றால்
உண்மையில் என்னைக் காப்பாற்று
நாட்டில் நடந்திடும் அவலங்கள்
நரகாசுரனே தேவலையே...
ஜவுளிக்கடை என்று ஒருஅசுரன்
சம்பளப் பணத்தில் முழுவதுமே
அழிவை நடத்தும் நிலையதனை
அறியாக் கடவுளாய் நீ எதற்கு...
வாரச்சம்பளம் வாங்கிய நான்
மாதச்சம்பளத்தில் மாறியதும் இழந்த நாளைக் கணக்கிட்டு
எனக்குக் கிடைத்ததே போனஸூ
இலவசப் பணமென்று என்பிள்ளை
பணத்திற்கு வெடிவைக்கும் சிறுபிள்ளை
பிள்ளைகள் வெடித்திடும் பட்டாசில்
புகையாய்ப் போனது என் போனஸூ
பலகாரம் என்ற அணுகுண்டை
பரிசோதனை செய்வர் என் உடலில்
வயிறே வெடித்தாலும் அதைப்பார்த்து
வாய்விட்டுச் சிரிக்கும் சிவகாசி...
மனைவியின் கொண்டாட்டம்
என் மணிபர்சே
பிள்ளையின் கொண்டாட்டம் போனஸ்ஸே
எனை மட்டும் திண்டாட ஏன் படைத்தாய்
எப்படிக் காப்பாயோ ஶ்ரீ கிருஷ்ணா...
போதும் போதும் தீபாவளி
பிழைக்கக் காட்டிடு வேறுவழி
கிருஷ்ணா உன்னை மன்றாடியே
கிழமை தோறும் வேண்டிக்கொள்வேன்
தீபாவளி என்ற அரக்கனிடம்
திறம்பட என்னைக் காப்பாற்றி
நரகாசுரனிடமே ஒப்படைடா
நான் நரபலி யாகவும் தயங்கவில்லை....
க.செல்வராசு..
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇