உற்று நோக்கி...

வண்ணச் சோலையுள்ளே
வழக்கமான இடத்தினிலே
வாடிக்கையாகவும்
வாட்டத்தோடும்
வந்தமர்ந்து....

விளையாடும் பிள்ளைகளை
வேடிக்கைப் பார்க்கும்

வயதான பாட்டியின்
ஒடுங்கிய விழிகள் - அங்கே
ஓடிக் களிக்கும்
ஒவ்வொரு குழந்தையிடத்தும்....

உற்று நோக்கித்
தேடுகின்றன - தன்னை
ஒதுக்கி விட்ட பிள்ளையின்
பிள்ளையை...

எழுதியவர் : இன்னிலா (28-May-18, 11:23 am)
சேர்த்தது : innila
Tanglish : uttru nokki
பார்வை : 79

மேலே