அழுவதா சிரிப்பதா
அழுவதா? சிரிப்பதா? நம் நிலை கண்டு என்ன செய்வேன் சகோதரா?
அப்போது கொடியை காக்க தன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார்.
இப்போதோ தன் உயிரே பெரிதென்று சுயநலமே உட்புகுந்து துப்பாக்கியை எடுக்கும் முன்னே இடிவிழுந்தாற் போல் ஒடுவார்.
அழுவதும், சிரிப்பதும் ஆண்டவன் விதித்த விதியென்றால் இரண்டில் எது வேண்டும் என்று தேர்வது கடவுள் தந்த சுதந்திரம்.
தன் வாழ்க்கையையே வாழ தெரியாத மனிதனுக்குத் எத்தனைப் பட்டங்கள்!
அடுக்கி அடுக்கி வைத்தே அலமாரி போதலை.
சேர்த்து வைத்தவன் செத்த பின் இதுவரை என்ன சாதித்தான்?
ஏதுமில்லை.
மாவிலும் கொள்ளை,
பணியாரத்திலும் கொள்ளை,
பேராசை கொண்ட இம்மனிதர்களின் மனதிற்கு எல்லையே இல்லை.
காரணம், அடக்கமோ ஒழுக்கமோ அறிந்தால் தானே!
அழுவதா? சிரிப்பதா? நம் நிலை கண்டு என்ன செய்வேன் சகோதரா?
ஆண் பெண் சமத்துவம் என்றிடும்.
பெண்ணிற்கே முன்னுரிமை அளித்திடும்.
பித்துபிடித்து விட்டது,
இதயத்திலே காதலி, காதல் என்ற சொல்லும் கசந்தே போனது,
காதலியே கசக்க மனையால் மட்டும் இனிக்கும்.
தவறில் உருவான உலகில் அதே தவறை மீண்டும் நான் செய்யேன் என்று சபதம் பூண்டால் என்ன?
மன தரித்திரம் ஒழிந்திட நல்வழி தேடினால் என்ன?