படிப்பு ஒரு தடையல்ல

#படிப்பு_ஒரு_தடையல்ல

படிக்க ஆர்வமிருந்தும்
படிப்பு வரவில்லையே! என்று
புலம்பிக் கொண்டும்...

படிப்பு வந்தும்
படிக்க முடியாமல் போனதே என்று
வறுமையில் வாடிக்கொண்டும்
வாழ்ந்தது போதும்
எழுந்து வா இளைஞனே!

உயர் படிப்பு என்பது
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படியல்ல..
நான்கு பேர் பாராட்டும் அளவிற்கு
வாழ்ந்து காட்ட
அது தடையுமல்ல...

மூன்றாம் வகுப்பு படித்த
காமராஜர் தான்
தலைவர்களுக்கு எல்லாம்
தலைவராக வாழ்ந்தார்...

ஏழாம் வகுப்பு படித்த
எடிசன் தான்
கண்டுபிடிப்பில்
முடிசூட மன்னனாக திகழ்ந்தார்....

பத்தம் வகுப்பு தேர்ச்சியடையாத
மாஸ்டர் சர்ச்சின் தான்
கிரிக்கெட்டில்
எண்ணற்ற சாதனைகள்
படைத்துள்ளார்....

அறிவு என்பது
'படிப்பில்' இருந்து வருவதை விட
'பட்டதில்' இருந்துதான்
அதிகம் வருகிறது...

அழகில்லாதக் குயிலுக்கும்
இனிய குரல் உண்டு...
அறிவில்லாத வாத்துக்கும்
அதிக அழகு உண்டு...
துணிவில்லாத பூனைக்கும்
நல்ல ஒழுக்கம் உண்டு...
ஊரைச்சுற்றும் நாய்க்கும்
நன்றி உணர்வு உண்டு....

உன்னிடமும்
ஏதாவது ஒன்றிருக்கும்
தேடிபார் இளைஞனே!

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-May-18, 3:59 pm)
பார்வை : 239

மேலே