விழித்துக்கொள்

விடியும்போது விமர்சிக்கும் தோழனே
முடியுமென்று முயற்சி எடு...

வெட்கவேதனைகளை சுமந்துக்கொண்டே செல்ல
நீ பொதி பிராணி அல்ல...

விழித்துக்கொள்...
நினைத்துக்கொள்..

இது உன்னுடைய வாழ்க்கையே...
வேண்டுமென்றாலும்
வேண்டாமென்றாலும் வாழும் வாழ்க்கையோ உன்னிடத்தில் ...

வேசம்போட்டு பாசமிட்டு தடைபோடும்
இவ்வுலகத்தில் வென்றுவிடும்
கோணங்களோ உன் பக்கத்திலே ...

பாதியில் விட்டுச்செல்ல
கோழையல்ல நீ ...
பண்பும் படிப்பும் பெற்றவன்,
அறிவும் ஆற்றலும் கொண்ட ஆண்மகனல்லவா நீ ...
பட்டுணர்ந்த பகுத்தறிவாளன்
அல்லாவா நீ ...
தடைகளை தகர்த்தெறியாமல் தயக்கங்கள் மட்டுமிங்கேனோ...!
வலிகளில்லா வாழ்க்கை இங்கேது , அதில் சில வழிகளுமுண்டு நாமும் வாழ ...

எழுதியவர் : Abu (28-May-18, 7:23 pm)
சேர்த்தது : அபு
பார்வை : 191

மேலே