பன் மடங்கு....

நான்
தாயாகும் போது
உண்டான
பரவசத்தை விட
பன் மடங்கு....

மணம் பரப்பும் குண்டு மல்லி
கொத்துக் கொத்தாய்... என்
மனதுக்குள்ளே பூத்து...

தித்திக்கும் இன்பத்தை
உண்டாக்கி...

கொண்டாட்டத்தால் ...என்னை
திண்டாட வைக்குதடி....

சேயே....என்
செல்ல மகளே...நீ
தாயாகப் போகும்
செய்தி...

எழுதியவர் : இன்னிலா (2-Sep-18, 1:21 am)
சேர்த்தது : innila
பார்வை : 165

மேலே