வரம் ஒன்று தருவாயா

கற்பவாதியாக வரம் ஒன்று வேண்டும்./

கட்டில் பந்தத்திற்கு தொப்புள் கொடி /
உறவு ஒன்று வேண்டும்./

மசக்கை என்னும் துயர் நான் அறிய வேண்டும்./

மாங்காய் சாம்பல் சுவைக்க வேண்டும். /

மனதிலே தாய்மை உணர்வு காண வேண்டும். /

பத்துத் திங்கள் அடி வயிறு தடவ வேண்டும்./

அத்தை பாசம் என் மேல் படர வேண்டும்./

அத்தான் வம்சம் வளர வேண்டும்./

இத்தனைக்கும் இறைவா வரம்
ஒன்று நீ தருவாயா ?

மார்பிலே பால் சுரக்க வேண்டும்./

மாற்றான் பிள்ளைக்கும் நான் ஊட்ட வேண்டும்./

தாலாட்டுப் பாட வேண்டும் /

பாட்டிலே தாய்மையின் ஏக்கத்தைக்
கூற வேண்டும்./

பத்தாண்டு தவம் பலன் கொடுக்க வேண்டும்./

மலடி என்னும் பட்டம் மறைய வேண்டும்./

இறைவா பிள்ளை செல்வமதை வரமாக நீ தருவாயா ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (30-Aug-18, 2:07 pm)
பார்வை : 483

மேலே