காதல் என்பது தேன்கூடு

இது நடந்துப்போகும்
தேன்கூடு
ஆயிரம் அறைகள்
கொண்டதல்ல
ஐந்தே தேன் சிந்தும்
அறைகள் கொண்டது

இதில் ஒரே ஒரு அறைக்கு
மட்டும் மகத்துவம் அதிகம்
இந்த மகத்துவம் வாய்ந்த
அறையின் தேனை
பருக நினைப்பவனெல்லாம்

அந்த அறையின் தேனீயை
அடிமையாக்கவேண்டும்
அடிமையாகாத தேனீ
மடிந்துப்போகுமே தவிர
தேன் பருக விடவே விடாது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Feb-18, 9:11 am)
பார்வை : 323

மேலே