என் கனாவே
கரிசல் காட்டு
மண்ணாய்
கானக் குயில்களின்
கீதமாய்
மருண்டோடும் மானின்
மிரட்சியாய்
மலையருவி
வீழ்ச்சியாய்
செங்காந்தள்
மலர்களின்
கூட்டமாய்
கைதேர்ந்த
தொழிலாளியாய்
காகிதத்
தாள்களின்
உரசலாய்
கண்ணில்
இருக்கும்
கருவிழியாய்
தேனை முகர்ந்திடும்
தேனீக்களின்
கூட்டமாய்
பாய்ந்தோடும்
நதிகளின்
ஆரவாரமாய்
துள்ளிக்குதித்து
விளையாடும்
மீன்களாய்
பனியை
தணிக்கும்
போர்வையாய்
பூவில்
இருக்கும்
மகரந்தமாய்
வானில்
உலாவரும்
வெள்ளை
நிலவாய்
என்னவென்று
சொல்வேன்
எப்படிச்
சொல்வேன்
பார்க்கும்
இடமெல்லாம்
பரிணமிக்கிறாய்
அலைய
வைக்கிறாய்
அடிமையாய்
என்னை
துடிக்க
வைக்கிறாய்
தூண்டிலிட்ட
புழுவாய்
சித்தம்
கலங்குதடி
சித்திரப்
பெண்ணே
விதி வசத்தால்
விழி மூடும்முன்னே
விரைந்து வாடி
என் கனாவே
என் தேவதையே
என் காதலியே
என் கண்மணியே