கொடுமை

கண்ணைக் கொடுத்து
ஒளியைப் பறிப்பது -கொடுமை.
வாய்யைக் கொடுத்து
மொழியைப் பறிப்பது -கொடுமை.
உறவைக் கொடுத்து
உரிமையைப் பறிப்பது - கொடுமை.
நட்பைக் காட்டி தடை
விதிப்பது -கொடுமை .
பாசம் காட்டி பாதியில்
பறிப்பது -கொடுமை.
பேச விட்டு முடிக்கும் முன்
மீதியை நிறுத்துவது -கொடுமை.
ஆசை காட்டி மோசம்
செய்வது -கொடுமை
ஆதரவு காட்டி அகம்
முறைப்பது-கொடுமை.
இனிமையான வார்த்தை
தடிப்பாக மாறினால் -கொடுமை.
இன்பம் காட்டி
துன்பம் கொடுப்பது -கொடுமை.
இரவு பகல் பாராது இதய
உறவாடல் செய்து இடை வெளி
கொடுப்பது -கொடுமை.
நினைவு இழந்து
நடை பிணம் போல் 'நான்
இருப்பது -கொடுமை.
இந்தனையும் புரிந்து விட்டு
நீ எட்டி நின்று வேடிக்கை
பார்த்துச் சிரிக்கின்றாயே
அதுதான் கொடுமையிலும்
கொடுமையெடா பெரும்-கொடுமை.