ஏதோ வானிலை மாறுதே

நான் எழுதிய கவிதைகளின்
காகிதங்கள் மொத்தமும் நீயாக,
உனை வரையும் கவிக்கோலாகவே
நானும் உருமாறிப்போனேனே...

நீ இசைத்த வரிகளின்
ஸ்வரங்கள் மொத்தமும் நானாக,
எனை மீட்டும் கைவிரல்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...

நான் வரைந்த ஓவியங்களின்
வண்ணங்கள் யாவும் நீயாக,
உனைத் தீண்டும் தூரிகையாகவே
நானு உருமாறிப்போனேனே...

நீ பார்த்த பார்வைகளின்
விழிகள் இரண்டும் நானாக,
எனை முத்தமிடும் இதழ்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...

நான் சேகரித்த இரவுகளின்
கனவுகள் அனைத்தும் நீயாக,
உனை அணைக்கும் காதலாகவே
நானும் எனை மாற்றிக் கொண்டேனே...!

எழுதியவர் : அன்புடன் சகி (15-Jun-18, 12:02 am)
பார்வை : 636

மேலே