கற்பனை காதல்

அடுத்தவன் தோட்டத்தில் காய்த்து தொங்கும்
மாங்காயை எண்ணி தினமும் பார்த்து ஏங்குவதுபோல்

அவளது அன்பை பெற தினமும் கோடி
ஏக்கங்கள் நான் கொள்ள வேண்டும்

அவளது முகத்தினை எண்ணி பல நாள் தூக்கங்கள்
நான் தொலைக்க வேண்டும்

என் முன்பு அவள் மினுக்கி செல்லும் அழகினை
வருடங்கள் கடந்து ரசிக்க வேண்டும்

அவளுடைய திமிரில் என்றும்
நான் தோல்வி காண வேண்டும்

அவளது அழகினை கண்டு ஆண்களுக்கு
மட்டுமல்ல
இவளை மணக்க நாமும் ஆணாக
பிறந்திருக்கலாமோ என்ற எண்ணம்
பெண்ணுக்கும் எழ வேண்டும்

எனது காதலை அவள் ஏற்கும் முன்
அவளது அழகினை சொல்லி நான்
ஒரு கவிஞன் ஆக வேண்டும்

அவளது முதல் முத்தத்தில் தாயின் கருவறை
இன்பத்தை மீண்டும் பெற வேண்டும்

அவளது வேதனைகளுக்காக மட்டுமே எனது
கண்ணீர் இம்மண்ணில் விழவேண்டும்.........

எழுதியவர் : jothi (5-Aug-16, 1:23 pm)
Tanglish : karpanai kaadhal
பார்வை : 382

மேலே