நம்பிக்கை

உன்னை நம்பிதானே உன்னுடன் ஓடிவந்தேன்

உன்னுறவு பெரிதென்று உறவுகள் உதறிவந்தேன்

நம்பிய பாவத்திற்கு நடுத்தெருவில் விட்டுவிட்டாய்

வியாபார சந்தையிலே விற்றுவிட்டு போயிவிட்டாய்


கைபிடிக்க வந்தவளை கைகழுவி விட்டுவிட்டாய்

உடல்ருசிக்கும் ஓனாய்களிடம் உறங்க வைத்துவிட்டாய்

என்ன பிரச்சனையோ இப்படிநீ செய்துவிட்டாய்

என்னை விற்றதாலே உன்பசி தீருமென்றால்

ஓனாய்களிடம் உறங்கிவிட எனக்கும் சம்மதந்தான்

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (5-Aug-16, 1:14 pm)
Tanglish : nambikkai
பார்வை : 292

மேலே