அறியாத வயசு
அறியாத வயசு அது
புரியாத மனசு அது
ஆர்ப்பரிக்கும் வெள்ளமென
அலைந்தாடும் அலைகள் அது
நான் அமரும் வரிசைக்கு
இணையான ஓர் வரிசை
அவள்தான் அமர்ந்திருந்தாள்
ஆழ்மனதை கொள்ளை கொண்டாள்
அவளிடம்தான் பேசிடத்தான்
ஆசைகொள்ளும் எந்தன் உள்ளம்
ஆனாலும் முடியவில்லை
ஆழ்மனதில் ஓர் அச்சம்
இப்படித்தான் காலங்கள்
கரைந்தோடும் தினந்தோறும்
ஆனாலும் இன்பங்கள்
உள்ளத்தில் உள்ளூரும்
வருடங்கள் உருண்டோட
அவள் எண்ணங்கள் மேலாட
காதலை சொல்லிவிட
கடைசியில் தீர்மானித்தேன்
கடைசி வருடமென்று
விட்டுவிட்டால் வேறுவழி இல்லையென்று
காத்திருந்தேன் காதல் சொல்ல
கனிமொழியாள் வரவில்லை