என்னவள்

பாழ் நிலமாய்க் கிடந்த இவனிதயம்!
பணிந்தேயேங்கும் மேகம் மறைத்த உதயம்!

பாசக்காரி உன் வரவால் தொலைந்ததென் காயம்!
உனைக் கண்ட நாள் முதலாய் சொப்பனங்கள் ஆயிரம்!

கற்பனையில் வாழ்வதுதான் சுகங்கள் பல்லாயிரம்!
நாமிருவம் கை பிடித்துப் பாவிசைத்தேயாகனும்!

விழி வழியே இதயம் நிறைந்தாய்!
விதி நமை சேர்க்க இறை பணிந்தாய்!

வாவென் கண்ணே கதைகள் பல பேசிடலாம்!
வானவர்கள் நமை வாழ்த்தி
பூமலை சொரிந்திடலாம்!

எழுதியவர் : ஜவ்ஹர் (26-Feb-23, 7:55 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : ennaval
பார்வை : 144

மேலே