காதல் பறவை 💕❤️

ஆயிரம் விழுதுகள் தாங்கி இருக்க

அழகான பறவைகள் வந்து இருக்க

காதல் பறவை இரண்டு இருக்க

வார்த்தை இல்லாமலே அது வர்ணிக்க

பெண் பறவை வெட்கத்தில் தலை

அசைக்க

நானும் அங்கு நின்று இருக்க

மழை வர காத்திருக்க

மகாராணி நீ எங்கு இருக்க

உனக்காக நான் காத்திருக்க

பறவையும் இங்கு காதலிக்க அழகான

தருணத்தை நான் ரசிக்க

எழுதியவர் : தாரா (26-Feb-23, 12:06 am)
சேர்த்தது : Thara
பார்வை : 197

சிறந்த கவிதைகள்

மேலே