மீண்டும் மீண்டும்

10 மாதம் குடி இருந்த என் முதல் வாடகை வீட்டில் (கருவறையில்)
மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்க வேண்டும்....

கதற கதற என் அம்மா என்னை விட்டு சென்ற ஆரம்ப பள்ளியில்
மீண்டும் ஒரு முறை அமர்ந்து பார்க்க வேண்டும்....

அரக்கால் சட்டை மாட்டி அலுப்போடு நான் சென்ற பள்ளியை
மீண்டும் ஒரு முறை வியப்போடு சுற்றி பார்க்க வேண்டும்....

தோளோடு தோள் உரசி
கையோடு கை சேர்த்து
கதை 100 பேசிய என் முதல் தோழியை
மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்....

மதபேதம் இல்லாமல், பந்தம் ஏதும் இல்லாமல், வேறுபாடு பார்க்காமல்
என் நண்பனின் எச்சில் உணவை
மீண்டும் ஒரு முறை ருசி பார்க்க வேண்டும்....

காதலின் ஆசை தூண்டிய என் காதலிக்கு
மீண்டும் ஒரு முறை கடிதம் எழுத வேண்டும்....

வாழ்வை பங்கிட்ட மனைவியை பார்த்த முதல் நாள்
மீண்டும் ஒரு முறை வர வேண்டும்....

மீண்டும் மீண்டும் புது விடியல் பல தோன்றினாலும்
குரங்கு மனம் என்னவோ முடிந்து போன வாழ்க்கையை தேடியே அலைகிறது...

கடந்து போன கசப்பான நிமிடங்கள் எல்லாம்
மீண்டும் மீண்டும் அனுபவ பாடமாக கண் முன்னே ஓடுகிறது....

மீண்டும் மீண்டும் எத்தனை முறை சிந்தித்தாலும்
கால கடிகாரம் பின்னோக்கி ஓடாது என்ற வருத்தத்தில்
இதோ என் ஆசைகளை இங்கே பதிந்துள்ளேன்....

எழுதியவர் : பிரதீப் ரா (14-Nov-15, 8:21 am)
Tanglish : meendum meendum
பார்வை : 98

மேலே