அரும்புகள்‍ - போட்டிக்கவிதை

அழகான ஒரு பெரிய தோட்டம்..
ஆங்காங்கே அழகிய பூக்களுடைய மரங்கள்..
இலைகளின் கதகதப்பில் நிம்மதியாய்.. தேன்
ஈக்களின் ரீங்காரத்தில் நடனமாடியபடி
உற்சாகமாய் பூத்துக்குலுங்கும் அரும்புகள்...
ஊரெங்கும் மணம்பரப்பும் தன் குணத்தால்..
எத்திக்கும் மகிழ்ச்சி மழை பெய்விக்கும்..
ஏகாந்தம் மறைய உறுதுணை நிற்கும்..
ஐஸ்வர்யம் உள்ளங்களில் பொங்கச் செய்து
ஒவ்வொரு நாளையும் நன்னாளாக்கும்..
ஓங்கிடும் அதனால் மனநலன் தன்னாலே..
ஒளட‌தம் நமக்கிந்த அரும்புகளே வாழ்வில்..
இஃதுணர்ந்து நல்வழி நடத்திடுவோம் அரும்புகளை...

இதுவரை சொன்னதில்.. தோட்டமே பள்ளிக்கூடம்!
பல மரங்களது... படிக்கும் வகுப்பறைகள்!
உற்சாகமாய் பூத்துக்குலுங்கும் அரும்புகளே 'மாணவர்கள்'!!
நீராய் காற்றாய் சூரிய ஒளியாய்
கல்வியை புகட்டுபவர்களே வழிநடத்தும் ஆசிரியர்கள்...
இந்த அரும்புகளே..
ஊரெங்கும் மணம் பரப்பும்
மகிழ்ச்சி மழை பெய்விக்கும்
ஏகாந்தம் மறைய வைக்கும்
ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும்
ஔடதமாய் நம் மனக்காயங்களை ஆற்றும்
இவ்வரும்புகள் நம் வாழ்வின் இனிக்கும் கரும்புகள்..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Nov-15, 6:24 am)
பார்வை : 1333

மேலே