மகிழ்ச்சியின் முயற்சி ----- போட்டிக்கவிதை

நம் உள்ளத்திற்குள் குடியேற‌
====மகிழ்ச்சி எடுக்கும் பலமுயற்சி!
நம் உள்ளம்காக்க அரவணைக்க
====அதற்குத் தேவை கடும்பயிற்சி!

என்றோ எவரோ பேசியதை
====எடுத்து அடிக்கி வைத்திருப்போம்!
என்றோ ஒருவர் திட்டியதை
====எடுத்து உள்ளே நிறைத்திருப்போம்!

நல்ல நல்ல தருணங்களில்
====வீணாய் எதையோ நினைத்திருப்போம்!
நன்மை கொடுக்கா சிந்தனைகள்
====இதயம் முழுதும் அடைத்திருப்போம்!

மழலையை கொஞ்சும் நேரத்திலும்
====இதயம் மகிழ்ச்சியாய் இருக்காது!
இளந்தென்றல் வீசும் நேரத்திலும்
====அதையும் ரசிக்கத் தோணாது!

மகிழ்ச்சி நம்மை தழுவிக்கொள்ள‌
====தூக்கம் பரிசாய் கொடுத்திருக்கும்!
தூங்கும் நேரமும் குழம்பிக்கொண்டு
====மகிழ்ச்சியை இகழச் செய்திருப்போம்!

மகிழ்ச்சிக்கு தேவை சாந்தமுகம்!
====மகிழ்ச்சிக்கு தேவை சாந்தமனம்!
மகிழ்ச்சிக்கு தேவை சாந்தகுணம்!
====மகிழ்ச்சியை மகிழச் செய்திடுவோம்!

தேவை இல்லா எண்ணங்களை
====இன்றே காலி செய்திடுவோம்!
பாவம் மகிழ்ச்சியின் முயற்சிக்கு
====பரிசாய் இதயம் தந்திடுவோம்!

மகிழ்ச்சிக்கு வேண்டாம் தட்டுப்பாடு!
====மகிழ்ச்சியின் கட்சிக்கு ஓட்டுப்போடு!
மகிழ்ச்சிக்கு எதுக்கு கட்டுப்பாடு!
====மகிழ்ச்சியின் பாட்டுக்கு மெட்டுப்போடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Nov-15, 6:20 am)
பார்வை : 106

மேலே