அரும்புகள்

வெயிலில் உருகும் சிறு பனித்துளி நான்
மழையில் நனையும் சிறுபூ நான்
உன்னில் உதித்த என்னுயிரை
மண்ணில் எறிந்து போனாயே..!

கருவில் சுமந்த உனக்கு - ஒரு
கள்ளிப்பால் தர மனமில்லையோ
கனவோடு பிறந்த எனக்கு
கஷ்டங்களை மட்டும் - ஏன்
பரிசாக தந்து போனாய்..?

வளையொலி எழுப்பும் உனது
கரங்கள் என்தலை கோதிட வராதா
மழைத்துளி என்மேல் விழுந்திட
உன் முந்தானை எனக்காக
குடையென மாறாதா..?

தன் குஞ்சுக்கு சோறுட்டும் காகம்
தன் குட்டிக்கு பாலுட்டும் ஆடு
தன் கன்றுக்கு நாவினால்
தடவிக் கொடுக்கும் பசு
இவைகளில் ஏதாவது ஒன்றாக
நான் பிறந்திருக்க கூடாதா..?

மலராத சிறு அரும்புகள்
மனம் வெதும்பி பூமியிலே
பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகள்
பால் நிலா வீதியிலே..!

எழுதியவர் : வீ.சந்திரா (14-Nov-15, 10:12 am)
Tanglish : arumpukal
பார்வை : 77

மேலே