உயிர்தேடும் பூக்கள்
வயிற்றுப் பசியினிலே..!
உயிர்தேடும் பூக்கள்
உருகிக் கருகின்றது
வறுமைவிடும் ஜுவாலையில்..
உலகம் அறிகின்றது..!
அவன் அறிவு மறைக்கின்றது
பணத்துக்கு தெரிகின்றது
பயம் பதுக்குகின்றது.
நிறம் பார்த்துக் கரம் நீட்டுகின்றான்..
தரம்பார்த்து தோளில்
தட்டுகின்றான்..தவிக்கும்..
உயிர்களின் தகவலை மறுக்கின்றான்,
கொடுப்பார்கள் கை..
நீளமென்று
கொடுத்தவன் கூறியிருக்க கூடயிருந்து பறிக்கின்றான்..
ஏழை உயிர்களை..
பசியோடு புதைக்கின்றான்.
அந்தோ பரிதாபம்..!
அனுதினமும் மரிக்கின்றது..
அங்கே கருந்தரும்புயிர்கள்..
கண் மூடிக்கிடக்காமல்..
விழித்தெழுங்கள்..
கை நீட்டிக் கேட்குமுன்
கொடுத்து விடுங்கள்..