Chandra - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Chandra
இடம்:  Pattukkottai
பிறந்த தேதி :  21-May-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Sep-2014
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  20

என்னைப் பற்றி...

படித்தது
பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி மேலும்,
இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை
கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

என் படைப்புகள்
Chandra செய்திகள்
Chandra - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 10:49 am

என் உள்ளங்கை ரேகையாக
உனது நினைவுகள் என்றும் அழியாது
அதனால்தானோ என்னவோ
என் எதிர்காலத்தில்
நீ இருப்பாய் என்று
கணித்து சொன்னது
கைரேகை ஜோசியம்..!

-துவரங்குறிச்சி வீ.சந்திரா

மேலும்

Chandra - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 12:21 pm

நீ ஒவ்வொரு முறை
என்னை அலட்சியப்படுத்தும் போது
நடைவண்டி பழகும் சிறுகுழந்தையாய்
மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறேன்
ஏனெனில்..?
அடிப்பட்ட மனதிற்குதான்
வலிகள் அதிகம் அதற்கு
மருந்திட உன்னைவிட
சிறந்த மருத்துவர் எவருமில்லை..!

மேலும்

Chandra - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 11:19 am

பட்டாம்பூச்சிகளை பிடிக்க வேண்டிய விரல்கள்
பட்டாசு தொழிற்சாலையில்
வெடி மருந்துகளை திணித்தப்படி..!

பலூன்களை ஊதவேண்டிய செவ்விதழ்கள்
பட்டறையில் இரும்பு சம்மட்டிக்கு
செந்நிற நெருப்புகளை ஊதியபடி..!

பட்டங்கள் விடவேண்டிய கைகள்
பாலீத்தின் பைகளை
சாலையோரங்களில் பொறுக்கியபடி..!

கணினியில் மவுசை பிடிக்க வேண்டிய கரங்கள்
தேனீர் கடையில் எச்சில்
கிளாஸ்களை கழுவியபடி..!

தொழில் வல்லுநர்களாக
வரவேண்டிய இளம் தொழில் அதிபர்கள்
கை, கால், கண்ணிழந்து சின்னஞ்சிறு அரும்புகள்
கடவுளின் சன்னதியில் பிச்சை பாத்திரத்தை
கையில் ஏந்தியபடி..!

மேலும்

Chandra - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 10:12 am

வெயிலில் உருகும் சிறு பனித்துளி நான்
மழையில் நனையும் சிறுபூ நான்
உன்னில் உதித்த என்னுயிரை
மண்ணில் எறிந்து போனாயே..!

கருவில் சுமந்த உனக்கு - ஒரு
கள்ளிப்பால் தர மனமில்லையோ
கனவோடு பிறந்த எனக்கு
கஷ்டங்களை மட்டும் - ஏன்
பரிசாக தந்து போனாய்..?

வளையொலி எழுப்பும் உனது
கரங்கள் என்தலை கோதிட வராதா
மழைத்துளி என்மேல் விழுந்திட
உன் முந்தானை எனக்காக
குடையென மாறாதா..?

தன் குஞ்சுக்கு சோறுட்டும் காகம்
தன் குட்டிக்கு பாலுட்டும் ஆடு
தன் கன்றுக்கு நாவினால்
தடவிக் கொடுக்கும் பசு
இவைகளில் ஏதாவது ஒன்றாக
நான் பிறந்திருக்க கூடாதா..?

மலராத சிறு அரும்புகள்
மனம் வெதும்பி பூமி

மேலும்

நன்று !! வாழ்த்துக்கள் !! 14-Nov-2015 10:41 am
Chandra - Chandra அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2014 11:42 am

அதிகாலை வேளையில்
போர்வையை இழுத்து பிடித்து
உறங்கும் போது காதை திருகி
செல்ல சினுங்களாய் அழும்
சிறு குழந்தையாய் கைபேசி..!


பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில் வீறிட்டு
அழும் சிறு குழந்தையாய்
கைபைக்குள் கதறும் கைபேசி..!

அலுவலக வேலையில்
டென்ஷனாய் இருக்கும் போது
அது புரியாமல் அடம் பிடிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

தனிமையில் இருக்கும் வேளையில்
ஓடிவந்து கட்டி பிடித்து கன்னத்தில்
முத்தமிடும் சிறு குழந்தையாய் கைபேசி..!

அடிக்கடி தொலைத்துவிட்டு
தேடி தவிக்கும் வேளையில்
எங்கோ மறைந்திருந்து
கண்சிமிட்டி சிரிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

இரவு உறங்கும் வேளையில்
தூங்காது சின

மேலும்

மகிழ்ச்சி மிக்க நன்றி kalkish 07-Oct-2014 8:35 pm
மிக்க நன்றி Rajesh 07-Oct-2014 8:33 pm
நல்ல படைப்பு தோழி ..! 07-Oct-2014 4:59 pm
அற்புதம் ...கைபேசியை கூட ஒரு பெண் தாய்மை உணர்வோடுதான் காண்பாள் என்று உரக்க உரைப்பதுதான் இக்கவியின் சிறப்பு. 05-Oct-2014 12:27 am
Chandra - Chandra அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2014 3:18 pm

காலை 8 மணி கணேஷ் படுக்கையைவிட்டு எழுந்து கைகளை மேலே தூக்கி சோம்பல் முறத்தப்படி கொல்லைப்புறம் சென்று முகம் கழுவி பல் விளக்கிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான்.

கணேஷின் தாய் கமலம் டம்ளரில் காபியை மகனிடம் கொடுத்தப்படி "ஏம்பா... நீ எங்கேயாவது வெளியில போற வேலை இருக்கா" என்றாள் மெதுவாக

"ஏன் கேக்குற..." என்றான் சற்று எரிச்சலுடன்.

"இல்ல கடையில சாமான் கொஞ்சம்தான் இருக்கு டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும் நீ கொஞ்ச நேரம் கடையை திறந்து பார்த்துகிட்டா" என்று சொல்லி முடிக்கும்முன்.

கணேஷ் "இதபாரும்மா... இந்த பொட்டி கடையில உக்காறா வைக்கவா என்னை இவ

மேலும்

மிக்க நன்றி Arunvalli 10-Oct-2014 3:04 pm
அருமைங்க ..கதை சிறிது அதன் கரு பெரிது.. 01-Oct-2014 8:47 pm
Chandra - Chandra அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2015 10:27 am

காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை வீடுகள்.

அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டது. அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ இல்லாத கிராமம் அது.

அந்த குடிசை வீட்டின் முன் சுள்ளிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வேளாயி... ஒல்லியான தேகம், எண்ணெய் தேய்க்காத தலை, கழுத்தில் தாலி இல்லை கிழிந்து போன சேலை

மேலும்

Chandra - Chandra அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 3:18 pm

காலை 8 மணி கணேஷ் படுக்கையைவிட்டு எழுந்து கைகளை மேலே தூக்கி சோம்பல் முறத்தப்படி கொல்லைப்புறம் சென்று முகம் கழுவி பல் விளக்கிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான்.

கணேஷின் தாய் கமலம் டம்ளரில் காபியை மகனிடம் கொடுத்தப்படி "ஏம்பா... நீ எங்கேயாவது வெளியில போற வேலை இருக்கா" என்றாள் மெதுவாக

"ஏன் கேக்குற..." என்றான் சற்று எரிச்சலுடன்.

"இல்ல கடையில சாமான் கொஞ்சம்தான் இருக்கு டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும் நீ கொஞ்ச நேரம் கடையை திறந்து பார்த்துகிட்டா" என்று சொல்லி முடிக்கும்முன்.

கணேஷ் "இதபாரும்மா... இந்த பொட்டி கடையில உக்காறா வைக்கவா என்னை இவ

மேலும்

மிக்க நன்றி Arunvalli 10-Oct-2014 3:04 pm
அருமைங்க ..கதை சிறிது அதன் கரு பெரிது.. 01-Oct-2014 8:47 pm
Chandra - Chandra அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2014 11:42 am

அதிகாலை வேளையில்
போர்வையை இழுத்து பிடித்து
உறங்கும் போது காதை திருகி
செல்ல சினுங்களாய் அழும்
சிறு குழந்தையாய் கைபேசி..!


பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில் வீறிட்டு
அழும் சிறு குழந்தையாய்
கைபைக்குள் கதறும் கைபேசி..!

அலுவலக வேலையில்
டென்ஷனாய் இருக்கும் போது
அது புரியாமல் அடம் பிடிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

தனிமையில் இருக்கும் வேளையில்
ஓடிவந்து கட்டி பிடித்து கன்னத்தில்
முத்தமிடும் சிறு குழந்தையாய் கைபேசி..!

அடிக்கடி தொலைத்துவிட்டு
தேடி தவிக்கும் வேளையில்
எங்கோ மறைந்திருந்து
கண்சிமிட்டி சிரிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!

இரவு உறங்கும் வேளையில்
தூங்காது சின

மேலும்

மகிழ்ச்சி மிக்க நன்றி kalkish 07-Oct-2014 8:35 pm
மிக்க நன்றி Rajesh 07-Oct-2014 8:33 pm
நல்ல படைப்பு தோழி ..! 07-Oct-2014 4:59 pm
அற்புதம் ...கைபேசியை கூட ஒரு பெண் தாய்மை உணர்வோடுதான் காண்பாள் என்று உரக்க உரைப்பதுதான் இக்கவியின் சிறப்பு. 05-Oct-2014 12:27 am
Chandra - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 8:05 am

நான் உன்னிடம் கேட்பது
=======================

என்னை பாரடி ..!

உனையே ரசிக்கிறேன்
உனையே தேடுகிறேன்

உனையே நினைக்கிறன்
உன் நினைவிலே வாழ்கிறேன்

உனையே எழுதுகிறேன்
நீயின்றியே
உன்னுடன் நடக்கிறேன்
நீயின்றியே
உன்னுடன் பேசுகிறேன்

வராத கவி வரிகளில்
உனையே வைக்கிறேன்
எழுதும் கருத்தின் முடிவில்
உனையே எழுதுகிறேன்

இமைகளை அழுத்தியும்
உனையே காக்கிறேன்
காரணம் கடத்தியும்
உனையே பிடிக்கிறேன்

பெண்ணே
நான் உன்னிடம் கேட்பது ..
..
....
இப்போதும் ஏதுமில்லை
இனியும் ஏதுமில்லை

நீ எப்படியோ
அப்படியே இரு
அது போதும் ......

- இராஜ்குமார்

நாள் ; 4 - 12 20

மேலும்

ஹா ஹா ...எல்லாம் ஒரு தேடல் தான் ஐயா ...வரவில் மிக்க மகிழ்ச்சி ஐயா 01-Oct-2014 5:11 pm
இரசுக்மாருக்கும் தம்புக்கும் மட்டும்தான் இந்த மாதிரி படங்கள் அகப்படுகிறது ... ஆச்சர்யம்தான் .. நன்று 01-Oct-2014 4:39 pm
வரவல் மகிழ்ச்சி நண்பரே 01-Oct-2014 4:22 pm
மௌனமே வார்த்தையாக ..இப்போது ! மாற்றமொன்று வந்திடுமே வேலை வரும் போது! -எண்ணமே கவிதையாகியிருக்கிறது ..நன்று! 01-Oct-2014 3:58 pm
Chandra - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 10:01 am

தினம் தவறாமல் உணவோடு வந்து விடுகிறாள்
பார்ப்பதற்கே அறிவுரை கொடுக்கிறாள்
யாரும் இல்லாத நேரங்களை
எதோ எதோ ரசனையோடு பேசிகொள்கிறாள்
அடிக்கடி தொட்டு தொட்டு பார்த்து சந்தோஷபடுகிறாள்
அவ்வப்போது என் அசட்டுத் சிரிப்பை ராசிக்கு ஒரு அசடு
கிசுகிசுக்கிறாய் சினிமாகாரங்களை விட அதிகமாவே
வரம் ஓன்று காடனாக கேக்கிறேன் கடவுளிடம்
உன் வீட்டு மீன் தொட்டியில் தங்க மீனாகி போக.

மேலும்

நன்றி 01-Oct-2014 7:20 pm
நன்றி அப்படியே செய்கிறேன் 01-Oct-2014 7:20 pm
நன்று 01-Oct-2014 1:52 pm
நல்ல படைப்பு... எழுத்தி பிழைகளை சர்ர்ப்பர்த்து கொள்ளுங்கள் !! 01-Oct-2014 10:35 am
Chandra - Chandra அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2014 10:13 am

எனக்குத் தெரியாமலே...
என் கண்ணுக்குள் மணியானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் இதயத்தின் துடிப்பானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் உயிருக்குள் உயிரானாய் ஆனால் என்னைவிட்டு பிரியும்போது மட்டும்
ஏன் தெரிந்தே சென்றாய்?
நீ எங்கு சென்றாலும் உன் கூடவே
வருவேன் உன் நிழலாக...
உன் சுவாசமாக உன் உயிராக...!

ஸ்ரீசந்திரா

மேலும்

நன்றி jebakeerthna 29-Sep-2014 8:38 pm
அப்படியா நன்றி Yadita 29-Sep-2014 8:34 pm
தெரிந்தே பிரிந்து சென்றவரை நினையாமல் இருபது மிகவும் நன்று,!!! 29-Sep-2014 4:39 pm
அழகு 29-Sep-2014 4:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
தேகதாஸ்

தேகதாஸ்

இலங்கை (மட்டக்களப்பு )
vinovino

vinovino

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
user photo

Nagini Karuppasamy

துபாய் (UAE)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே