மீண்டும் மீண்டும்

நீ ஒவ்வொரு முறை
என்னை அலட்சியப்படுத்தும் போது
நடைவண்டி பழகும் சிறுகுழந்தையாய்
மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறேன்
ஏனெனில்..?
அடிப்பட்ட மனதிற்குதான்
வலிகள் அதிகம் அதற்கு
மருந்திட உன்னைவிட
சிறந்த மருத்துவர் எவருமில்லை..!

எழுதியவர் : வீ.சந்திரா (14-Nov-15, 12:21 pm)
சேர்த்தது : Chandra
Tanglish : meendum meendum
பார்வை : 83

மேலே