Nagini Karuppasamy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nagini Karuppasamy |
இடம் | : துபாய் (UAE) |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 331 |
புள்ளி | : 253 |
கவியே வாழ்க
(குறள் வெண்செந்துறை)
நாளும் பயிற்றுவித் தேயெமை பாங்குடன்
ஆளும் திறத்தினில் ஆக்கும் கவியே!
நன்றி உமக்கு நவின்றுப் பயில்கிறோம்
மன்றில் நடுவினில் மண்டியிட் டேவுவந்தே!
மகிழ்ந்து பயிலும் மதியின் திறத்தை
நெகிழ்ச்சி உரையால் நெறிப்படுத் தென்றுமே!
நாவும் இனிக்க வடித்தநல் பாவெனும்
நோவும் மறக்கவோர் நோக்கமே வாழ்கவே!
... நாகினி
நம்தோழர்!
(கலித்துறை)
மழையினை வேண்டி மண்வளம் காக்கும் விவசாயி
களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய்
அழைப்பினை ஏற்றே அவனியில் மாறிச் சென்றிடுங்கால்
உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்!
உலகினில் பஞ்சம் உணவதில் வராமல் காத்திடவோர்
அலகென உழைப்பின் ஆற்றலைத் தருமோ ருன்னதமாய்
நிலமதை உழுது நீக்கம றவுண வூட்டுகின்ற
நலமிகுத் தொண்டு நாட்டிடும் உழவர் நம்தோழர்!
ஆற்றினில் நீரும் ஆழமாய் வற்றும் துயர்களுடன்
காற்றினில் ஈரம் கலங்கிடும் சோகம் வந்தாலும்
ஏற்றமும் இறைத்து ஏற்புடன் உழைப்போர் விவசாயி
சேற்றினில் கைகள் செம்மையாய்ப் பதிக்கும் நல்லோரே!
... நாகினி
ஓசோன் குறைபாடு..
சூழும் இரசாயனப் புகை
ஓசோன் மண்டலம்
ஆரோக்கியம் அழிக்கும் பகை..
***
இரசாயனப் புகை ஓசோனுக்கு
அனுப்பிப் பெறுகிறான்
அழிவுப் பகை..
***
மரங்கள் இல்லா வாழ்வு
விழும் ஓட்டை
ஓசோன்..
***
புவி வெப்பமாகும்
நோய்கள் பெருகும்
ஓசோன் குறைபாடு..
... நாகினி
பெரியார்..
உயிர் மூச்சு
பகுத்தறிவு
தந்தை பெரியார்..
***
மரியாதைக்குரியது
நேரம் பொருள் விரயம் தவிர்ப்பு
சுயமரியாதைத் திருமணம்..
***
தமிழகத்தில் தேவதாசிமுறை
தலை சாய்த்த
தலைமை தந்தைபெரியார்..
***
அணைந்தும் அணையாத
காட்டுத் தீ
பால்ய விவாகம் ...
***
ஆலயத்தில் நுழைந்தது
சமத்துவம் சாதித்தவர்
வைக்கம் வீரர்..
... நாகினி
என்ன சொல்ல ஏது சொல்ல
ஓடி ஓடி உழைத்தும்
உலக்கு அரிசி மிஞ்சல
தேடித் தேடிப் பார்த்தும்
வறுமை நீங்க வழியில்லை
ரோட்டோரம் படுத்துறங்கி
இருக்கக் கூரையும் குடிக்கக் கூழும்
இல்லாத எங்க நெலமைய
என்ன சொல்ல ஏது சொல்ல...
நாலெழுத்துப் படிச்சி
கணக்காக காலத்தைக் கழிக்க
கைநிறைய சம்பளம் வாங்கிடத்தான்
நாள் கிழமை பார்த்து
பாடம் படிக்க அனுப்பிவச்ச
பெற்றவர்கள் வயித்துல புளியக் கரைச்சி
காதல் போதையில் மாட்டி
தடுமாறும் இளைய மனம்
திருட்டுக்கல்யாணம் செய்யும் கொடுமையை
என்ன சொல்ல ஏது சொல்ல...
குடும்ப நிலைமைய உறவுகளைப்
பெருசா நினைக்காம
தன்னல நோக்கத்தோடு
மனசுலகஷ்டமுன்னு
தன் உயிரைத் தானே கொன
துளித் துளியாய் ஆறுதல்.. 2
வெட்டுப்படும் மரம்
உயிர்க்கும் பல்லுருவங்கள்
கலையுலகத்தில் சாகா வரம்..!!
****
இடிபட்டு எழும்பும் இல்லம்
நனையும் ஆத்மா
புசிக்கும் வெல்லம்..!!
****
தூண்டிலில் அகப்படவில்லை
எதிர்நீச்சல் மீனுக்கு
இலவச இரை சுகப்படவில்லை..!!
... நாகினி
ஏப்ரல் 1
சிறப்பாகத்தான் இருக்கிறது
நம்மை நாமே கொண்டாடி
முட்டாளாக்கிக் கொள்(ல்)வதும்..
கடவுள் உண்டு இல்லையெனும்
சர்ச்சைக்குத் தீர்வின்றி
வருடந்தோறும் ஆன்மீகப்பண்டிகை
வாழ்த்துப் பரிமாற்றத்தில்
கருத்து வேறுபாடற்ற இணைகோடுகளாய்
ஆத்திகரும் நாத்திகரும்...
ஐந்தாண்டுக்கொருமுறை வரும்
தேர்தல் திருவிழா
நிமிடத்திற்கொரு முறையென
நடத்தப்பட வேண்டிய சூழல்
சாபக்கேடு வந்தாலும்
நல்மாற்றம் வருமென்ற எதிர்பார்ப்பில்
போட்டிக் களத்தில் நிற்போரின்
அகம் மறைத்த தேனொழுகு சொல்
போலி வாக்குறுதிகளை நம்பி
தலைமையைத் தேர்ந்தெடுக்கும்
கள்ள ஓட்டெனும் கள்ளனும்
பிறப்புரிமையாய் மதிக்கும் வாக்குரிமையாளன
காதல் துளிப்பா..
உணர்வுக் குவியல்
காதல்
கனவு கலந்த அவியல்..
.......
பொய்யுரைக்கத் தூண்டும்
காதல் மனம்
மெய்யை வருத்தும் யாண்டும்..
.....
மௌனப் பூட்டுடையா
காதல்
இல்லற ஊரடையா..
.....
நயந்து உருகி சொல்லப்படும்
காதல் ஊருக்கு
பயந்தும் கைவிடப்படும்..!!
... நாகினி