காதல் துளிப்பா

காதல் துளிப்பா..

உணர்வுக் குவியல்
காதல்
கனவு கலந்த அவியல்..
.......
பொய்யுரைக்கத் தூண்டும்
காதல் மனம்
மெய்யை வருத்தும் யாண்டும்..
.....
மௌனப் பூட்டுடையா
காதல்
இல்லற ஊரடையா..
.....
நயந்து உருகி சொல்லப்படும்
காதல் ஊருக்கு
பயந்தும் கைவிடப்படும்..!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (4-Mar-14, 12:31 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
Tanglish : kaadhal thulippaa
பார்வை : 97

மேலே