நெல்லை ஏஎஸ்மணி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : நெல்லை ஏஎஸ்மணி |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 25-Apr-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 2477 |
புள்ளி | : 2178 |
கம்பன் ஷெல்லி கை பிடித்து rnகவிபுனை பாரதி தோள் அமர்ந்து rnஇளங்கோவடிகள் நடை கொண்டு rnஇனிமை கண்ணதாசன் அடி பற்றி rnபுதிய கவிஞர்கள் புடை சூழ rnபுதுப் புது கவிதைகள் படைக்க ஆசை. . . rn
பருவத்தின் வாசலில்
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் போன
பாவையென் நிலையறிவாயா. . .
உருவத்தின் செழிப்பில்
உள்ளார்ந்த களிப்பில்
உன்னைத் தொலைத்து
உறைந்து போகிறாயா. . .
நெடுநாள் ஆசைகளை
நெஞ்சினில் புதைத்து
நேசக்கரங்களை தினம்
நோக்கியே அழைக்கிறேன்.
ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
ஆகாயம் பூமிக்கும்
அளந்திட எண்ணமுண்டு.
கொஞ்சம் காதல்
கோபுர நிழலாய்
காவல் கொடு போதும்
கன்னியின் மனச்சிறையில். .
- நெல்லை ஏ.எஸ்.மணி-
பருவத்தின் வாசலில்
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் போன
பாவையென் நிலையறிவாயா. . .
உருவத்தின் செழிப்பில்
உள்ளார்ந்த களிப்பில்
உன்னைத் தொலைத்து
உறைந்து போகிறாயா. . .
நெடுநாள் ஆசைகளை
நெஞ்சினில் புதைத்து
நேசக்கரங்களை தினம்
நோக்கியே அழைக்கிறேன்.
ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
ஆகாயம் பூமிக்கும்
அளந்திட எண்ணமுண்டு.
கொஞ்சம் காதல்
கோபுர நிழலாய்
காவல் கொடு போதும்
கன்னியின் மனச்சிறையில். .
- நெல்லை ஏ.எஸ்.மணி-
மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்
இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖
பனி விழும் இரவிலும்
குளிர்ந்து விடாத
என் வீட்டின் முற்றம்
சிலிர்ந்து விடும்
உன் சிவந்த பாதத்தால்
ஒரு முறை நீ உரசிச் சென்றால்....
வசந்தம் வீசும்
வண்ணப் பொழுதினில் அவளை
வாரி அணைத்துக் கொண்டேன். . .
ஆரபியாய் அவளை
அள்ளி எடுத்து
ஆனந்தக் கூச்சலிட்டேன். . .
தோடியில் அவளைத்
திளைக்க வைத்து
தொடுவானம் கூட்டிச் சென்றேன். .
பைரவியாய் அவளைப்
பல்லக்கில் சுமந்து
பாதி உலகம் சுற்றினேன். . .
கௌரி மனோகரி அவளைக்
கைகளில் ஏந்தி ஏழு
கண்டங்களைக் காட்டினேன். . .
சண்முகப் பிரியனாய் அவளைச்
சடுதியில் தூக்கி
சங்கு சக்கரம் சுற்றினேன். . .
தர்பாரில் ராஜாவாக
தாங்கவொன்னா அவள் இதயமதில்
தாவி அமர்ந்து கொண்டேன். . .
மொகனத்தீயை அவளுள் மூட்டி
முத்த மழை பொழிந்து
மூழ்கிடச் செய்தேன் . . .
மனோலயம் கொண்டு
வசந்தம் வீசும்
வண்ணப் பொழுதினில் அவளை
வாரி அணைத்துக் கொண்டேன். . .
ஆரபியாய் அவளை
அள்ளி எடுத்து
ஆனந்தக் கூச்சலிட்டேன். . .
தோடியில் அவளைத்
திளைக்க வைத்து
தொடுவானம் கூட்டிச் சென்றேன். .
பைரவியாய் அவளைப்
பல்லக்கில் சுமந்து
பாதி உலகம் சுற்றினேன். . .
கௌரி மனோகரி அவளைக்
கைகளில் ஏந்தி ஏழு
கண்டங்களைக் காட்டினேன். . .
சண்முகப் பிரியனாய் அவளைச்
சடுதியில் தூக்கி
சங்கு சக்கரம் சுற்றினேன். . .
தர்பாரில் ராஜாவாக
தாங்கவொன்னா அவள் இதயமதில்
தாவி அமர்ந்து கொண்டேன். . .
மொகனத்தீயை அவளுள் மூட்டி
முத்த மழை பொழிந்து
மூழ்கிடச் செய்தேன் . . .
மனோலயம் கொண்டு
ஐக்கூ :
1.
கீழே விழுந்தும்
சிரித்துக் கொண்டே இருந்தது...
பூக்கள்...!!!
2.
கருகிப் போகவில்லை...
வெயிலில் வைத்துச் சென்ற
காகிதப் பூக்கள்...!!!
3.
மலர்ந்தப் பூக்கள்
தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறது...
ஓவியத்தில்...!!!
பத்து ரூவா காசு
பாவி நான்
பத்திரமா வச்சிருந்தேன் . . .
பாத்தவுக சொல்லுவீரோ
பாவிக்கு
பாத்தவுக சொல்லுவீரோ . . . .
பான்ட்ஸ் பவுடர் டப்பா
பாத்து நானும் ஓட்ட போட்டு
பக்குவமா வச்சுருந்தேன் . . . .
கொஞ்ச நாளாக் காணலியே
அஞ்சு நாளாத் தூங்கலியே . . . .
பரணுலயும் தேடிப்புட்டேன்
போன எடந் தோணலையே . . . .
பேத்தி கேக்கும் பஞ்சுமுட்டாய்
பாவி வாங்கிக் கொடுக்கலையே . . . .
பேரன்கூடக் கேக்கலியே
போடான்னு நான் சொல்லலியே . . . .
தனியாளா இந்த கட்ட
தடுமாறித் தவிக்கிறேனே . . . .
பொட்டு வச்ச மாமனுந்தான்
போனானே காட்டு வழி . . . . .
பெத்தெடுத்த புள்ளைகளும்
பார்
என்னுயிர்த் தோழர்களே
என்னை அழுக்காங்குகளேன் . . . .
முழுமனதோடு கூவுகிறேன்
முகவரி தாருங்களேன் . . . .
வெண்மையில் தவிக்கிறேன்
வேறு நிறமிடுங்களேன் . . . .
குதித்தோடும் தமிழ் பிடித்து
குமிழ் நிறைய மையேந்துங்களேன் . . .
தமிழ் கொண்டு நீங்கள்
ததும்பத் ததும்ப கவி புனையுங்களேன் . . . .
காதல் கடிதங்கள் வரைந்து
காணாப் பிணமாய் கிழித்தெறியுங்களேன் . . . .
கல்லாவை நிரப்பலாம்
காசாக அச்சேற்றுங்களேன் . . . .
சதுர வடிவம் தந்து என்னைச்
செவ்வானம் எங்கும் பறக்க விடுங்களேன் . . . .
மனதின் குறைகளை மறவாமல் பட்டியலிட
தினசரி குறிப்பாக்கி தலையணை அடி வையுங்களேன் . . . .
விடியலை விரும்பும் விழிகள். . .
இருளின் தடங்களில்
இட்ட சுவடுகளை காண
விடியலை தேடும் விழிகள் . . . .
நாதக் குழலில்
நாபியின் இருளில்
நயம்பட வரும் இசை மறந்து
விடியல் தேடுது விழிகள் . . .
இரவின் படிக்கட்டுகளில்
இச்சை தீர நடனமிட்டு
இன்னுமொரு இருள் வேண்டி
விடியல் தேடுது விழிகள் . . . .
விடிந்தபின் எழுந்து
வீணாக உழன்று
வெந்து கடந்து
வேதனை தீர்க்கும்
இருளைப் பிரிந்து
விடியலை தேடுது விழிகள் . . . .
நீ தூங்கினாலும்
விடியல் உறங்காது. . .
பறவைகள் உனக்கு
விடியலை உணர்த்தும் . . .
இன்றைய விடியலில்
எதனைத் தொலைத்தாய் . .
எதனைப் பெற்றாய் . . .
விடியலை விரும்பும் விழிகள். . .
இருளின் தடங்களில்
இட்ட சுவடுகளை காண
விடியலை தேடும் விழிகள் . . . .
நாதக் குழலில்
நாபியின் இருளில்
நயம்பட வரும் இசை மறந்து
விடியல் தேடுது விழிகள் . . .
இரவின் படிக்கட்டுகளில்
இச்சை தீர நடனமிட்டு
இன்னுமொரு இருள் வேண்டி
விடியல் தேடுது விழிகள் . . . .
விடிந்தபின் எழுந்து
வீணாக உழன்று
வெந்து கடந்து
வேதனை தீர்க்கும்
இருளைப் பிரிந்து
விடியலை தேடுது விழிகள் . . . .
நீ தூங்கினாலும்
விடியல் உறங்காது. . .
பறவைகள் உனக்கு
விடியலை உணர்த்தும் . . .
இன்றைய விடியலில்
எதனைத் தொலைத்தாய் . .
எதனைப் பெற்றாய் . . .
ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.
ஆம்.இந்த சுமைதாங்கியால் இந்த நேரத்தில் மட்டுமே ஆசைப்படத் தெரியும்.மற்ற நேரங்களில் துன்பப்பட,துயரப்பட,வெட்கப்பட,வேதனைப்படத்தான் முடியும்.
சுமையேற்றிகளாகிய உங்களிடம் இந்த தேர்தல் நேரத்தில் மட்டும்தான் என்னைப் போன்ற சுமைதாங்கியால் ஆசைப்பட்டு சில உரையாடல்கள் பண்ண முடியும்.
அறுநூறு அடி ஆழ்குழாய் இட்டும் சொட்டுத் தண்ணீர் இன்றி வானம் நோக்கி அழுத இந்த சுமைதாங்கி, வானம் கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்து ,என் வீட்டைச் சுற்றிலும் ஆறு அடி தண்ணீர் ஓடிய போதும் நீச்சலினூடே கட்டுச் சாதத்திற்காக கதறி அழுதவனும் இதே சுமைதாங்கிதான்.
பழம் எனக்கு உ
நண்பர்கள் (547)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

இரா இராஜசேகர்
வீரசிகாமணி , சங்கரன்கோவில

வீ முத்துப்பாண்டி
மதுரை

ப தவச்செல்வன்
திண்டுக்கல்
