பௌர்ணமி
மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்
இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖