சுரேஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ்குமார் |
இடம் | : இராசிபுரம், நாமக்கல்(Dt) |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 455 |
புள்ளி | : 107 |
கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை.
யார்
உன்னிடம்
அழகான கவிதை
சொல்வதேனா
கடும்போட்டி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
காற்றில் சினுங்கியபடியே
கவிதை படிக்கும்
உன்
காதோர லோலாக்கிடம்....
காத்திருப்பு
நீ கற்றுத்தந்த பாடம்
சிலநாள்
புகைவண்டி நிலையத்தில்
சிலநாள்
அலுவலகத்தின் வாசலில்
இருந்தும்
உன் மீது
கோபம் கொண்டதில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?
அப்படித்தான்
இப்போதும்
காத்திருக்கிறேன்
நீ
சென்றது
ஒருவழி பாதையாமே(மரணம்)
எல்லோரும் சொல்கிறார்கள்
அதில்
நம்பிக்கையற்று
காத்திருக்கிறேன்
இறுதியாய்
நீ
போன வழிபார்த்து
இப்போதும்
உன்மீது
கோபமில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?
மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்
இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖
மடியில் தலைவைத்தபடி
பெளர்ணமி நிலவை
பார்த்து ரசிப்பதில்
உனக்கு அலாதி பிரியம்
நீ
நிலவை ரசிப்பாய்
நான்
குழந்தை போன்ற
உன் செய்கையை ரசிப்பேன்
என்றெனும்
நான் தொலைவில் இருந்தால்
அலைபேசியில்
அழைத்து
எதிர்முனையில்
முழுநிலவை ரசித்தபடி
என்னையும் ரசிக்கச் செய்வாய்
மாதத்தோறும்
வரும் நிலவுதான்
என்னோடு ரசிக்க
நீ அழைக்கும்
அந்த முப்பது நொடிகள் தான்
நம் காதல்
வாழ்ந்து வளர்ந்த நொடிகள்
இப்போது
உனக்காக
காத்திருக்கிறோம்
நானும்
பெளர்ணமியும் 💖💖💖
உன்னை பற்றியோ
என்னை பற்றியோ
பிறிதொரு பொருளை பற்றியோ
எதுவாயினும்
எழுதிய பக்கத்தை
நீ
அங்கீகரித்து
அலாதித்து ஆராதித்த
பின்னே
அச்சில் ஏற்றுவேன்
இப்போதும்
எழுதுகிறேன்
உன்
பிரிவை பற்றி
என்
தனிமையை பற்றி
பிரிதொரு
பொருளின் அவலங்களை பற்றி
அங்கீகரிக்கவோ
அலாதித்து ஆராதிக்கவோ
நீயில்லா
ஆதங்கத்தில்
எழுதிய காகிதத்தை
கசக்கி எறிகிறேன்
உன்
ஞாபகங்களை போலவே
அவைகளும்
நிறைந்து கிடக்கிறது
என் அறை முழுவதிலும்!!!
உயிரும் மெய்யும் சேர்ந்ததே
மனித பிறவி.......
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
சேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற
சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...
எம்மொழியிலும் உண்டோ?
இருனுற்று நாற்பத்தேழு எழுத்து!
எம் மொழியாம் தமிழ் மொழிக்கு
இவையே கவச குண்டலங்கள்...
எம்மொழி எழுத்திற்கும்
தமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..
தமிழ் மொழி எழுத்து
தனிச்சிறபுடையதென்றே
செம்மொழி சான்று பெற்றது.....
நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல
அயல்நாட்டு அறிஞர்களும் கூறினர்
தமிழ் மொழி தனிசிறப்புடையதென்று....
சங்கம் வைத்து வளர்த்த மொழி
யாதெனில் அது எம் தமிழ்மொழியே!
யாதொரு மொழி எழுத்துடனும் சார
உன்னை சந்தித்த நாள் துவங்கி
உன்னை தொலைத்த நாள் வரை
நான் சுமந்த பாரங்களை
நீ அறிய வாய்ப்பில்லை!!
உன்னை மட்டும்
நினைத்துக் கொண்டு
நிராகரித்து செல்கிறேன்
நீ உருவாக்கிய வாய்ப்புகளை!!
வாழும் வாழ்க்கையை
உனக்கென்று
முடிவெடுத்து வாழ்கிறேன்..
இவையெல்லாம் நீ அறியா நிஜமடா!!
உன் புன்னகையில் துவங்கி
உன் புன்னகையில் வாழ்வது
எவ்வளவு பெரிய வரம்!!
இவை நான் பெற
தவறிய சாபம் நான்!!
உன் புன்னகைக்காக வாழும் ஒருவள்
உனக்காகவும் தான்!!
நீயாக புரிந்துக் கொண்டு
சொல்லி விடு
உனக்கானவள் நான் என்று!
குழந்தை தொழிலாளி
கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .
"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மா
கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .
"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மாணிக்கம். "சரி விடுங்க அண்ணாச்சி சின்ன பையந்தான போகப்போக சரியாயிடுவான்" என்று