தமிழ் எழுத்தின், மொழியின் சிறப்பு
உயிரும் மெய்யும் சேர்ந்ததே
மனித பிறவி.......
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
சேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற
சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...
எம்மொழியிலும் உண்டோ?
இருனுற்று நாற்பத்தேழு எழுத்து!
எம் மொழியாம் தமிழ் மொழிக்கு
இவையே கவச குண்டலங்கள்...
எம்மொழி எழுத்திற்கும்
தமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..
தமிழ் மொழி எழுத்து
தனிச்சிறபுடையதென்றே
செம்மொழி சான்று பெற்றது.....
நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல
அயல்நாட்டு அறிஞர்களும் கூறினர்
தமிழ் மொழி தனிசிறப்புடையதென்று....
சங்கம் வைத்து வளர்த்த மொழி
யாதெனில் அது எம் தமிழ்மொழியே!
யாதொரு மொழி எழுத்துடனும் சார்பில்லாமல்
தனி எழுத்தாய் வளர்ந்தது தமிழ் எழுத்தே..
ஒரெலுத்திற்கும் பொருளுண்டு
ஈரெலுத்திற்கும் பொருளுண்டு
எம் தமிழ் மொழியில்...
கல்வெட்டுகளும் கூறும்
தமிழ் எழுத்தின் சிறப்பை
கண்ணாடி போல் காட்டும்
தமிழின் மரபை,,,
பிறமொழி எழுத்து கலவாது
தமிழ் எழுத்து கொண்டே
சொற்றொடர் அமைவதும்
எம் தமிழ் மொழியில் மட்டுமே...
அயல் நாட்டவர் கண்டறிந்த
முகநூலிலும் முகம் காட்டி
தமிழனுக்கு முகவரி கொடுப்பதும்
தமிழ் எழுத்தே...
தமிழ் கவிதையில்
எதுகை மோனை என
ஏதுவாய் எழுதிட
ஏற்புடையதும் தமிழ் எழுத்தே...
உரைநடையை உரைத்திட
உதவுவதும் தமிழ் எழுத்தே....
தாயின் பெருமையை கூற
தனயனால் தான் முடியும் - அதுபோல
எம் தாய் தமிழ் மொழியின் பெருமையை
கூற தமிழ் எழுத்தால் தான் முடியும்.