எம்ஜியாரு குழந்தைப்பாடல்
எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
தமிழ் பேசும் இதயங்களில்
கனியாகத் தானே—அந்தக்
கனியோடு பசுமையான—தளிர்
இலையாகத் தானே.
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
சின்னச் சின்னப் பிஞ்சான
எண்ணங்களில் தானே-சத்து
அன்னமிட்ட நெஞ்சமான--கல்வித்
தந்தையாகத் தானே.
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
ஏழை அவன் சிரிப்பினிலே
இறைவனாகத் தானே-என்றும்
வாழும் வழி காந்தியான--குடிசை
ஒளியாகத் தானே.
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
தர்மனாக வாழ்ந்த தமிழ்
தங்கத் தலைவரு—வாழ்வில்
தனக்கென வாழாக் கர்ணக்
கொடை வள்ளலே
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
புரட்சி எனும் சொல்லுக்கான
புகழ் அவர்தானே—தமிழில்
வறட்சி எனும் சொல்லொழித்த
வாத்தியார் தானே.
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
எம்ஜியாரு தானே சினிமா
என்பதுதானே நிசமா--இன்றும்
அவர்தான் சூப்பர் ஸ்டாரு
என்பதுதானே பேறு.
எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.
கொ.பெ.பி.அய்யா.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
