காத்திருப்பு

காத்திருப்பு
நீ கற்றுத்தந்த பாடம்
சிலநாள்
புகைவண்டி நிலையத்தில்
சிலநாள்
அலுவலகத்தின் வாசலில்
இருந்தும்
உன் மீது
கோபம் கொண்டதில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?
அப்படித்தான்
இப்போதும்
காத்திருக்கிறேன்
நீ
சென்றது
ஒருவழி பாதையாமே(மரணம்)
எல்லோரும் சொல்கிறார்கள்
அதில்
நம்பிக்கையற்று
காத்திருக்கிறேன்
இறுதியாய்
நீ
போன வழிபார்த்து
இப்போதும்
உன்மீது
கோபமில்லை
காதலில்
காத்திருப்பும் சுகம்தானே?

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (13-Dec-19, 3:34 pm)
சேர்த்தது : sowmyasuresh
Tanglish : kaathiruppu
பார்வை : 197

மேலே