அவள் அழகு
உன்னழகை வருணிக்க
நான் எழுதிய கவிதை வரிகள்
இதோ கிழிந்து குவிந்து கிடக்கின்றன
ஏன்.... ஏன் .... ஏனென்றால்
நான் எழுதிய கவிதையின்
ஓர் அடி கூட உன் அழகின்
பிம்பமாய் என் மனக் கண்ணாடியில்
நான் காணவில்லையே
தோற்றதடி என் கவிதைகள்
உன் அழகைக் காண