கனவு நனவாகாதோ

கனவுலகில் நான்.......
கற்பனையில் ஒருத்தியை வ்ரித்தேன்
அவளை அப்படியே வரைந்து சித்திரமாக்கினேன்
கற்பனை தாகம் இன்னும் கூட
கற்பனையிலே சித்திரத்தை சிற்பியாய் மாறி
பொற்சிலையாக்கினேன் .................
கற்பனையில் என் பார்வையால்
அப்பொற்சிலைக்கு உயிர் ஊட்டினேன்
பொற்சிலை இப்போது அன்னம்போல்
ஆடி வந்தாள் என் மனதை அள்ளிக்கொள்ள
அந்த பேரழகியை என் கரங்களால்
அள்ளி அணைத்து முத்தமிட நினைத்தேன்......
விழித்துக்கொண்டேன் .....
முற்றத்தில் ஒற்றைக்கட்டிலில் நான்
இன்னும் பிரம்மச்சாரி .....
எனக்கோர் காதலி இன்னும் நிஜத்தில்
நான் காணவில்லையே ....
கனவும் கற்பனையின் நனவாகும் நாள்...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Dec-19, 1:37 pm)
பார்வை : 198

மேலே