அவன் நினைத்தானோ

ஏன் இந்த பதட்டம்/
இது பதட்டமா/ மயக்கமா/
எங்கும் எதிலும் பற்றற்ற நிலை
அவன் குற்றமற்றவன்தான்
ஆனால் அவன் கண்கள் மட்டும்
களவாடி விட்டதே ஓர் அழகை,
இது அவன் தவறல்ல
இயற்கையின் தீண்டல்
பார்த்த நிமிடத்தில் பதுக்கிக்கொண்டான்
தன்னகத்தே கன்னியின் அழகை,
பழம் நழுவி பாலில் விழுந்தது போல்,,,,
அவன் நினைத்தானோ இது நடக்குமென்று /
மெல்ல மெல்ல காதல் அரும்பியது
எதேச்சையாக அவள் எதிரில் அவன்
திக்குமுக்காடினான் என்ன சொல்வதென்று
அவளின் கனிந்த பார்வை
அவனை கொள்ளையிட்டது
மேலும் மேலும் காதலின் தென்றல்
அவர்கள் இருவரின் மீதும்
மெல்ல மெல்ல மோதியே சென்றது .

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Dec-19, 12:47 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 111

மேலே