உன் ஞாயபகங்கள்

உன்னை பற்றியோ
என்னை பற்றியோ
பிறிதொரு பொருளை பற்றியோ
எதுவாயினும்
எழுதிய பக்கத்தை
நீ
அங்கீகரித்து
அலாதித்து ஆராதித்த
பின்னே
அச்சில் ஏற்றுவேன்
இப்போதும்
எழுதுகிறேன்
உன்
பிரிவை பற்றி
என்
தனிமையை பற்றி
பிரிதொரு
பொருளின் அவலங்களை பற்றி
அங்கீகரிக்கவோ
அலாதித்து ஆராதிக்கவோ
நீயில்லா
ஆதங்கத்தில்
எழுதிய காகிதத்தை
கசக்கி எறிகிறேன்
உன்
ஞாபகங்களை போலவே
அவைகளும்
நிறைந்து கிடக்கிறது
என் அறை முழுவதிலும்!!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (12-Nov-19, 7:57 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 872

மேலே