என்னவனே உன்னைத்தான்

பருவத்தின் வாசலில்
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் போன
பாவையென் நிலையறிவாயா. . .

உருவத்தின் செழிப்பில்
உள்ளார்ந்த களிப்பில்
உன்னைத் தொலைத்து
உறைந்து போகிறாயா. . .

நெடுநாள் ஆசைகளை
நெஞ்சினில் புதைத்து
நேசக்கரங்களை தினம்
நோக்கியே அழைக்கிறேன்.

ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
ஆகாயம் பூமிக்கும்
அளந்திட எண்ணமுண்டு.

கொஞ்சம் காதல்
கோபுர நிழலாய்
காவல் கொடு போதும்
கன்னியின் மனச்சிறையில். .

- நெல்லை ஏ.எஸ்.மணி-

எழுதியவர் : நெல்லை ஏ.எஸ்.மணி (13-Nov-19, 2:08 am)
Tanglish : ennavale unnaithaan
பார்வை : 454

மேலே