ராகங்கள் பதினாறு
வசந்தம் வீசும்
வண்ணப் பொழுதினில் அவளை
வாரி அணைத்துக் கொண்டேன். . .
ஆரபியாய் அவளை
அள்ளி எடுத்து
ஆனந்தக் கூச்சலிட்டேன். . .
தோடியில் அவளைத்
திளைக்க வைத்து
தொடுவானம் கூட்டிச் சென்றேன். .
பைரவியாய் அவளைப்
பல்லக்கில் சுமந்து
பாதி உலகம் சுற்றினேன். . .
கௌரி மனோகரி அவளைக்
கைகளில் ஏந்தி ஏழு
கண்டங்களைக் காட்டினேன். . .
சண்முகப் பிரியனாய் அவளைச்
சடுதியில் தூக்கி
சங்கு சக்கரம் சுற்றினேன். . .
தர்பாரில் ராஜாவாக
தாங்கவொன்னா அவள் இதயமதில்
தாவி அமர்ந்து கொண்டேன். . .
மொகனத்தீயை அவளுள் மூட்டி
முத்த மழை பொழிந்து
மூழ்கிடச் செய்தேன் . . .
மனோலயம் கொண்டு அவள்
மனதினை வசியம் செய்து
மன்மதக் கோலம் பூண்டேன். . .
நாட்டை கொண்டு
நங்கையவளை என்
நவீன சாட்டையால் அடித்தேன். . .
பாகேஸ்வரி அவளெனப்
பாங்குடன் கூறி அவள்
பாலை வனத்தில் மழை பொழிந்தேன்.
காம்போதி கலந்தென்
கைவிரல் நகம் கொண்டு அவள்
கன்னத்தில் கீறலுட்டேன். . .
ஹம்ச வர்தினி அவளை
துவம்சம் செய்து
தூங்கிட வைத்தேன் . .
கல்யாணி ராகத்தால் அவள்
கைத்தலம் பற்றி அவளைக்
களவாடிக் கொண்டேன். . .
சாரங்கத்தில் அவளைத் தேற்றி
சாமரம் வீசியவளை
சாந்தப் படுத்தினேன் . . .
சரஸவதி கோலம் பூண்டவளெனை
சட்டெனச் சாய்த்து விட்டு
சடுதியில் மறைந்து விட்டாள். . .
பாடும் ராகங்கள்
பதினாறும் தந்தவனை
பகற்கனவினில் மறந்து போனாள்.
* * * *
நன்றியுடன் ,
மல்லி மணியன்.