எல்லோருக்கும் வேண்டும் அபரிவிதமான அன்பு
உணர்ச்சி கடலில் மூழ்கி முத்துகுளிக்க நினைக்கிறார்கள் காதல் செய்வோர்.
தோழர்களே உங்களுக்கு சில தினவுகள்!
Eiffel Tower உச்சியில் ஏறுவதை விடவும் மகிழ்ச்சி உங்கள் காதலரின் இதய டவரின் அலைவரிசையாய் மாறுவது!
எதனை பாடுபடுகிறார்கள் இளைஞர்கள் (இளைஞிகள்!) இந்த அலைவரிசையில் ஜேசுதாஸ் பாட்டு கேட்காத என்று!
முதல் சில நாட்கள் கனத்த இதத்தோடும்
தொடரும் பல மாதங்கள் வீங்கிய முகத்தோடும் (ப்பா... இன்னா அடி)
Best Ever woman தேடியே boys அலைச்சல்!
Perfect Gentleman ஐ எதிர்பார்த்தே girls பாய்ச்சல்
மேற்சொன்ன இரண்டுமே உலகில் இல்லை என்ற உண்மையை
தெரிந்தும் தெரியாமலும்.
Beach ஓர நடைபயணம்
corner seat திரை அரங்குகள்
ECR இல் 100km தாண்டும் பைக் பயணம்
புதிதாய் முளைத்த KFC, Mcdonald களில் புரியாமல் தேடிய Menus
நிறைய எதிர்பார்ப்புகள்
எண்ணிலடங்கா சண்டைகள்
பிரிவும் பின்தொடரவும் வாடிக்கையாகிப்போன வாழ்க்கை
ஏம்பா ஒரே சோகமா இருக்கே ? இது அம்மாவின் புலம்பல்.
எங்கயாவது கூப்பிட்டுப்போய் மந்திரிச்சிவிட்டு வாடி? இது அப்பாவின் ஆதங்கம்.
கவலைப்படாத மச்சான் சரக்கடிப்போம் எல்லாம் சரியாயிடும், இது தற்குறி நண்பனின் party ஏக்கம்.
உங்களிடம் ஓர் எதார்த்த வினா.
கனவு வாழ்க்கையை தேடிக்கொண்டு
முன்னும் பின்னும் ஊஞ்சலாடும் முடிவு நோக்கிய எண்ணங்களோடு
எத்தனை நாள்தான் போர் புரிவீர்கள்.
இரண்டு மாதங்கள் போதுமே
இந்த பெண்ணோடும் ஆணோடும்
இறுதிவரை கைபிடித்து நடக்கலாம் என
தீர்க்கமாய் தீர்மானித்திட.
காலம் ஒன்று இருந்தது
காதலரை கண்டு மையல்கொண்டு
உருகி உருகி காத்துக்கொண்டிருந்தது.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் whatsapp, facebook வரவுக்கு பிறகு.
தினம் தினம் திசை மாறும் இளவல்கள் இன்று ஏராளம்.
காதலை கலாச்சாரமாக மாற்றி காசு பார்க்கும் விளம்பர உலகம்.
நான்கைந்து வருட காதலுக்கு பிறகு
கைகொடுக்கும் பெற்றோர் பார்க்கும் வரன்கள்.
தோல்வி மனநிலை தகர்த்த வாழ்கை compromises.
சலிப்பு தட்டிய பழைய உறவு பாதிப்புகள்
கரைந்து கரைந்து காதலித்துவிட்டு
ஊருக்கு ஒத்து வராது என பிரிந்து விடுதல்
இவையெல்லாம் காதல் ஆகாது (அ) காதல் தோல்வி ஆகாது.
இறுதியாக,
காதல் ஒரு Biological Change.
உணர்ச்சி என்ற வாகனத்தில் தாறுமாறாய் ஓட நினைப்பது.
இணை தேடும் வேட்கை மட்டுமே அது.
திருமணம் இந்த வேட்கையை தணித்து
வாழ்க்கைக்கு அழைக்கிறது.
வாருங்கள்... வாழ்க்கையை காதலிப்போம்!
வாழ்கை முழுதும் காதலிப்போம்!