வானமும் அவளும்
வானத்தில் வானவில்லை
காணவில்லை
அதை அவளின் புருவத்தில் கண்டேன்
வானத்தில் வெண்ணிலவை
காணவில்லை
அதை அவளின் நெற்றியில் கண்டேன்
வானத்தில் நீலத்தை
காணவில்லை
அதை அவளின் கண்களில் கண்டேன்
வானத்தில் கார்மேகத்தையும்
காணவில்லை
அதை அவளின் கூந்தலில் கண்டேன்
வானத்தில் நட்சத்திரத்தை
காணவில்லை
அதை அவளின்
மேகலையில் கண்டேன்
வானமும் பூமியும் இணையாமல்
இணையகண்டேன்
அது அவளின் இடையோ என்றேன்
என்ற வரிகள் எண்ணத்தில் ஓடுகிறது...