என்னைக் கொடுத்து உன்னைப் பெறுகின்றேன்
கொடுக்க நினைத்தேன் காதலை
எடுக்க நினைத்தேன் இதயத்தை
அடுக்க நினைத்தேன் கவிதையை
தடுக்க நினைத்தேன் சோகத்தை
முடிக்க நினைத்தேன் தனிமையை
இறுக்கிப் பிடித்தேன் இனிமையை
அடிக்க நினைத்தேன் தோல்வியை
துணிந்து முடித்தேன் வேள்வியை
சிரித்து அருகில் காதலே
சிறுசிறு துளியாய் தூறலே
பிடித்தே விட்டேன் உன்னையே
பிடித்துக் கொண்டது காதலே
என்னை உன்னிடம் தந்துவிட்டு
உன்னை என்னிதயம் வைத்துக்கொண்டேன்
முன்னைவிட மகிழ்வாய் மனமே
இன்னும் அதிகம்வேண்டும் அன்புதினமே...